சிங்கப்பெண் சிறப்புப்படை பெண் காவலருக்கு பாலியல் காவல் ஆய்வாளரே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பணியாற்றும் சிங்கப்பெண் சிறப்புப்படையில் இடம்பெற்றுள்ள பெண் காவலருக்கு ஆய்வாளர் திலீபன் தொல்லை கொடுத்துள்ளார். தன் மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து தட்டிக் கேட்க வந்த அவரது கணவரை, அனைவர் முன்னிலையிலும் துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.