திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் அருகே பழங்குடியின பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தவெக தெரிவித்துள்ளது. மேலும், இதுகுறித்து வெளியிட்ட பதிவில், “காவல்துறையைத் தன்வசம் வைத்திருக்கும் முதலமைச்சரோ, மக்களின் உயிரையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதை விட விளம்பரங்களுக்கே முக்கியத்துவம் அளிக்கிறார். குற்றங்களைக் கண்காணிக்கவோ, உரிய நடவடிக்கை எடுக்கவோ நேரமின்றி நிர்வாகம் முடங்கிக் கிடக்கிறது” என விமர்சிக்கப்பட்டுள்ளது.