பீகாரின் ஜமுய் மாவட்டத்தில் அண்மையில் 10ஆம் வகுப்பு மாணவியை நடுரோட்டில் பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் நந்தன் யாதவ் என்பவர் சுட்டுப்பிடிக்கப்பட்டார். இந்த நிலையில், நந்தன் யாதவின் மனைவி 9 மாத கர்ப்பமாக இருப்பதாகவும், அவரது நிலைமையைக் கருத்தில் கொண்டு, தன் மகனின் உயிரைப் பறிக்க வேண்டாம் என தாயார் காவல்துறையிடம் கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்துள்ளார். சம்பவம் நடந்தபோது காணொளியில் 7 குற்றவாளிகள் இருந்தும், போலீஸ் தன் மகனின் காலில் மட்டும் சுட்டது ஏன் என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.