தமிழில் ‘சினம்கொள்’, ‘உயிர்வரை இனித்தாய்’ போன்ற படங்களில் நடித்தவர், நடிகை நர்வினி டெரி. திரையுலகில் பெண்கள் சந்திக்கும் தவறான அணுகுமுறைகள் குறித்து வீடியோவில் பேசியுள்ளார். அதில் சில இயக்குநர்கள் 'மெண்டல் அட்ஜஸ்ட்மெண்ட்' என்று அனாகரிகமாக நடந்துக்கொள்வதாக கூறினார். மேலும், நடிகர் அஜ்மல் அமீர் ஆடிஷனில் தவறாக நடந்துகொண்டதாகவும், தன்னை கட்டிப் பிடிக்க முயற்சித்ததாகவும் கூறியுள்ளார். ஆனால், இது குறித்து அப்போது போலீசில் புகார் அளிக்காமல் விட்டது இப்போது வருத்தமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.