கோவை சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இவ்வழக்கை விரைவு நீதிமன்றத்தில் விசாரித்து குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணமும் உளவியல் ஆதரவும் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
நன்றி: கலைஞர் செய்திகள்