பீகார் சட்டப்பேரவை தேர்தலில் என்டிஏ கூட்டணி 190 இடங்களிலும், எதிர்க்கட்சிகளின் மகாகத்பந்தன் கூட்டணி 50 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. எதிர்க்கட்சிகளின் முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் சுமார் 14,583 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்து களத்தில் உள்ள பாஜக வேட்பாளர் சதீஷ்குமார் யாதவ் 17599 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். பீகார் அரசியல் வரலாற்றை புரட்டிப் போடும் வகையில் தேர்தல் முடிவுகள் வந்துகொண்டிருக்கின்றன.