அக்னி வீரர்களின் சேவை மேலும் 2 ஆண்டுகள் நீட்டிப்பு

இந்திய ராணுவத்தில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் அக்னி வீரர்களின் 4 ஆண்டு சேவை காலம் நிறைவடைந்த நிலையில், அவர்களின் சேவையை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் 25% வீரர்கள் நிரந்தர பணியில் சேர்க்கப்படும் நிலையில், மீதமுள்ள 75 % வீரர்களுக்கு இந்த 2 ஆண்டு சேவை நீட்டிப்பு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நீட்டிப்பு காலத்திற்கு பிறகு, தகுதிபெறும் வீரர்கள் இந்திய ராணுவ படையில் இணைத்து கொள்ளப்படுவார்கள் என்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕