உ.பி: துப்பட்டா மற்றும் புடவையால் கழுத்தை இறுக்கி, கடந்த 14 மாதங்களில் 9 பெண்களை கொலை செய்த குல்தீப் (35) என்ற சீரியல் கொலைகாரன் கைது செய்யப்பட்டுள்ளார். குல்தீப்க்கு 2014ல் திருமணமாகியுள்ளது. இவரின் மோசமான நடவடிக்கை பிடிக்காமல் அவரின் மனைவி பிரிந்து சென்றுள்ளார். இதனால் பெண்கள் மீது கோபம் கொண்ட குல்தீப், பெண்களை கொலை செய்துவிட்டு அவர்களின், லிப்ஸ்டிக், பொட்டு போன்ற உடைமைகளில் ஒன்றை எடுத்து வைத்துக்கொள்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.