அமெரிக்கத் தலைநகரில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபரின் தனி இயக்குநராகப் பணியாற்றி வந்த செர்ஜியோ கோர், இந்தியாவுக்கான புதிய தூதராக ஆகஸ்ட் மாதத்தில் அறிவிக்கப்பட்டார். இந்தியப் பொருள்கள் மீது அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் இரு நாடுகளிடையேயான உறவில் பாதிப்பு ஏற்பட்ட சூழலில் கடந்த நவம்பரில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக கோர் பதவியேற்றார். கடந்த 10ஆம் தேதி இந்தியா திரும்பிய கோர், டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் திங்கள்கிழமை முறைப்படி பொறுப்பேற்றார்.