நெசவாளர்களுக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும்: சௌமியா அன்புமணி கோரிக்கை

வேளாண்மை துறையை போலவே நெசவாளர் நலனுக்காகவும் மாநிலத்தில் தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் இன்று (செப்.1) பாமக MLA சௌமியா அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார். மழைக்காலங்களில் தொழில் செய்ய முடியாமல் நெசவாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாவதை சுட்டிக்காட்டிய அவர், அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும், மழைக்காலங்களில் நெசவாளர்களுக்கும் நிவாரண உதவித்தொகை வழங்கிட அரசு முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி