நீதிமன்றத்தின் அனுமதியுடன் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராகலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அவர் அமைச்சராக விரும்பினால் அதற்கான மனுவை தாக்கல் செய்யலாம் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கில் இந்த கருத்தை நீதிமன்றம் இன்று (அக்.06) வெளிப்படுத்தியுள்ளது. அதே நேரம் ஜாமீன் தொடர்பான நிபந்தனைகளை அவர் மீறக்கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது.