போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பணமோசடி செய்த வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று (நவ.07) ஆஜரானார். 2011–15 காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் இந்த வழக்கில் மொத்தம் 2,222 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விசாரணை எம்.பி., எம்.எல்.ஏ. வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. நீதிபதி மேலும் 50 பேருக்கு சம்மன் அனுப்பி, விசாரணையை நவம்பர் 12-க்கு ஒத்திவைத்தார்.