தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் பணிப்புரிந்த மூத்த தொகுப்பாளரும், செய்திவாசிப்பாளருமான சரளா மகேஷ்வரி (71) வயது மூப்பு காரணமாக இன்று (பிப்.12) காலமானார். கடந்த 1976 முதல் 1984 ஆம் ஆண்டு வரை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் பணிப்புரிந்த சரளா மகேஷ்வரி இந்தியத் தொலைக்காட்சி நேயர்களிடையே மிகவும் பிரபலமாக அறியப்பட்டார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை 4 மணியளவில் டெல்லியில் உள்ள நிகம் போத் காட் பகுதியில் நடைற்றதாக கூறப்படுகிறது.