'செங்கோட்டையன் திமுகவிற்கு வருவார்' - அன்வர் ராஜா நம்பிக்கை

செங்கோட்டையனின் உழைப்பு திராவிட இயக்கத்திற்கு பயன்பட்டால் நல்லது என்று அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்த அன்வர் ராஜா தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு இன்று (நவ., 26) பேட்டியளித்த அவர், 'என் சாய்ஸ் என்னவென்றால், செங்கோட்டையன் திமுகவிற்கு வருவார் என்று நம்புகிறேன்; அவரது உழைப்பு திராவிட இயக்கத்திற்கு பயன்படும்' என்று தெரிவித்தார். எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன், தவெகவில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி