அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று (நவ.26) எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து, நாளை விஜய் முன்னிலையில் தவெகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவருக்கு கட்சியில் அமைப்பு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படும் என கூறப்படுகிறது. விஜய் கட்சியில் இணைந்த பின்னர், இபிஎஸுக்கு எதிராக செங்கோட்டையன் அரசியல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தலாம் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.