செங்கோட்டையனுக்கு முக்கிய பொறுப்பு.. கொங்கு மண்டலத்தில் அதிரடி

தவெக தலைவர் விஜய்யும், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் இன்று (நவ., 26) இரண்டு கட்டங்களாக ஆலோசனை நடத்தினர். முதல் கட்ட ஆலோசனையில் விஜய், செங்கோட்டையன், வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். இரண்டாம் கட்டத்தில் விஜய், செங்கோட்டையன், ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினர். செங்கோட்டையனுக்கு நிர்வாக குழுவை வழிநடத்தும் ஒருங்கிணைப்பாளர் மற்றும் கொங்கு மண்டல பொறுப்பாளர் பதவிகள் வழங்கப்பட உள்ளன.

தொடர்புடைய செய்தி