தங்கம் ரூ.59,520-க்கு விற்பனை.. பெரும் அதிர்ச்சி

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்., 30) வரலாறு காணாத மிகப் பெரிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, ரூ.59,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.65 உயர்ந்து ரூ.7,440க்கு விற்பனை ஆகிறது. கடந்த இரண்டு வாரங்களாக தங்கம் விலை கடும் உயர்வைச் சந்தித்த நிலையில் இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.109க்கும், ஒரு கிலோ ரூ.109,000க்கும் விற்பனையாகிறது.

தொடர்புடைய செய்தி