நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரை ரத்து செய்யக்கோரிய வழக்கில் வரும் 19-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. திருமணம் செய்து கொள்வதாக கூறி சீமான் தன்னை ஏமாற்றியதாக கடந்த 2011ம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி வழக்கு தொடர்ந்திருந்தார். இதைத்தொடர்ந்து, வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், "பிப்.19-ம் தேதி வழக்கை விசாரித்து, அன்றைய தினமே உத்தரவு பிறப்பிக்கப்படும் "என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் கூறியுள்ளார்.