சீமான் ஒரு போலி தமிழ் தேசியவாதி என விசிக தலைவர் திருமாவளவன் கடுமையாக தாக்கி பேசியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், "சீமானை அண்ணாமலை, எச்.ராஜா, குருமூர்த்தி போன்றோர் ஆதரிக்கின்றனர். அண்ணாமலை, எச்.ராஜா, குருமூர்த்தி போன்றோர் என்றாவது பிரபாகரனை ஆதரித்ததுண்டா? விடுதலைப்புலிகளை ஏற்காதவர்கள் வரிந்துகட்டி சீமானை ஆதரிப்பது ஏன்? பாஜகவின் கொள்கை பரப்பு அணி போல் சீமான் செயல்படுகிறார்" என்று பேட்டியளித்துள்ளார்.
நன்றி: News Tamil 24x7