தூத்துக்குடி பெரியதாழை அருகே நாதகவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று (ஜூன்.15) பனைமரம் ஏறி கள் இறக்கினார். சீமான் பனைமரம் ஏறிய போது அவரது கால்களில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டது. சீமானுக்கு காயமேற்றுள்ளதால் பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் அந்த போட்டோவை பதிவிட்டு #பனைக்காவலன்_சீமான் என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.