தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட சீமான் கைது

திருநெல்வேலியில் தடையை மீறி மாடு மேய்க்கும் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டுள்ளார். பணகுடி மேற்கு தொடர்ச்சி மலையில் சீமானின் மாடு மேய்க்கும் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இந்நிலையில், மேய்ச்சல் சமூக மக்களின் வாழ்வாதார போராட்டத்தை அரசு ஒடுக்குவதாக கூறி சீமான் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால், சீமான் உள்ளிட்ட 20 பேர் கைது செய்யப்பட்டு, தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

நன்றி: குமுதம்

தொடர்புடைய செய்தி