நடிகை விஜயலட்சுமி வழக்கில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரானார். இரவு 9.15 மணிக்கு ஆஜராகுமாறு சீமானுக்கு காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், காவல் நிலைய வாசலில் 45 நிமிட காத்திருப்புக்கு பின் சீமான் வளசரவாக்க காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரானார். நள்ளிரவைத் தாண்டியும்கூட விசாரணை நீடிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.