14,300 அடி உயரத்தில் பாதுகாப்பு படையினர் ஹோலி கொண்டாட்டம்

லடாக்கின் 14,300 அடி உயரத்தில் உறைந்து போயுள்ள பாங்காங் ஏரி பகுதியில், இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் எல்லையோர கிராம மக்களுடன் இணைந்து ஹோலி பண்டிகையை இன்று (மார்ச்.4)  கொண்டாடினர். உறைய வைக்கும் கடுங்குளிரையும், பொருட்படுத்தாமல் இக்கொண்டாட்டம் நடைபெற்றது. எல்லை பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும் விதமாக இந்த நிகழ்வு அமைந்தது.

நன்றி:ANI

தொடர்புடைய செய்தி