மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்ததாக பாஜக மற்றும் அதற்கு துணை போகும் அதிமுக-வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சென்னை சைதாப்பேட்டையில் மத்திய பாஜக அரசு மற்றும் அதிமுகவைக் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், வி.சி.க., சி.பி.எம்., சி.பி.ஐ., முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் கலந்துகொண்டுள்ளன.
நன்றி: நியூஸ்18