குடிபோதையில் ஊராட்சி அலுவலகம் வந்த செயலர்: பொதுமக்கள் வாக்குவாதம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மல்லேகவுண்டம்பாளையம் கிராம ஊராட்சி செயலராக பணிபுரியும் ராஜேந்திரன் (52), நேற்று பணிக்கு வந்தபோது குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதை கவனித்த பொதுமக்கள் சிலர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

தொடர்புடைய செய்தி

✕
✕