நடிகையும், நாடாளுமன்ற உறுப்பினருமான கங்கனா ரனாவத் தாலி அணிந்திருந்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலானது. இது அவர் ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டாரோ என்ற யூகங்களுக்கு வழிவகுத்தது. தற்போது இந்த வதந்திகளுக்கு கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டா பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். அதில், “நான் ஒவ்வொரு நாளும் நகரத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் படப்பிடிப்பில் இருக்கிறேன். யாரோ ஒருவர் இந்த புகைப்படத்தை படப்பிடிப்பில் மேக்கப்புடன் எடுத்துள்ளனர்” என குறிப்பிட்டுள்ளார்.