இடைநிலை ஆசிரியர்களின் ஊதியப் பிரச்னைக்கு மூவர் குழு அறிக்கை அடிப்படையில் தீர்வு காணப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, 37 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். மாணவர்கள் கல்வி நலன் , நெடுநாட்களாக போராடும் ஆசிரியர் உடல் நலன் கருதி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நன்றி: நியூஸ்18