திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை குழு நடத்தும் ஆலோசனை தொடங்கியுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் கிரிஷ் சோடங்கர், செல்வப்பெருந்தகை, எம்.என்.ஹெக்டே உள்ளிட்டோர் மு.க.ஸ்டாலினுடன் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் அதிக தொகுதிகளை கேட்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ள நிலையில், இந்த பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.