நடிகை அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிக்கப்பட்ட விவகாராத்தில் சீமானின் உதவியாளர் சுபாகர், காவலாளி அமல்ராஜ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் போலீசாரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் இருவருக்கும் சோழிங்கநல்லூர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. எனினும் மற்றொரு வழக்கில் ஜாமின் மனு நிலுவையில் இருப்பதால் அவர்கள் சிறையிலிருந்து வெளியே வருவதில் சிக்கல் நீடிக்கிறது.