டி20 உலகக் கோப்பை லீக் சுற்று போட்டியில் இத்தாலி அணியை 73 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஸ்காட்லாந்து அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி 4 விக்கெட்டுகள் இழந்து 207 ரன்கள் எடுத்தது. இதன்பின் களமிறங்கிய இத்தாலி அணி 16.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.