நிலவில் புதிதாக 1,000 விரிசல்கள் கண்டுபிடிப்பு: விஞ்ஞானிகள் அதிர்ச்சி

அமெரிக்காவை சேர்ந்த நாசா விஞ்ஞானிகள், நிலவின் மேற்பரப்பில் புதிதாக 1,114 விரிசல்களைக் கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் நிலவில் உள்ள மொத்த விரிசல்களின் எண்ணிக்கை 2,634 ஆக உயர்ந்துள்ளது. நிலவின் உட்புற பகுதி படிப்படியாக குளிர்ச்சியடைந்து வருவதால், அதன் மேற்பரப்பு சுருங்கி இத்தகைய அழுத்தமும் விரிசல்களும் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த மாற்றங்கள் நிலவின் பரிணாம வளர்ச்சியை புரிந்துகொள்ள பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி