"பழைய சோறு"-ன் ஆரோக்கிய நன்மைகளை மையமாகக் கொண்டு ஒரு மாபெரும் அறிவியல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ஜனவரி 5, 2026 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பழைய சோறு தயாரிப்பை ஊக்குவிக்கும் போட்டி, ஜனவரி 3 (சனிக்கிழமை) காலை 9.00 மணிக்கு அங்கு நடைபெறுகிறது. பொதுமக்கள் கலந்துகொள்ளலாம்.