பள்ளிகள் திறப்பு தேதியை தள்ளிவைக்க வேண்டும்! - அன்பில் மகேஷ் வலியுறுத்தல்

மாணவர்களின் உடல் நலனைப் பாதுகாக்கும் வகையில், பள்ளிகள் திறப்பு தேதியை தள்ளிவைக்க வேண்டும் என முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வலியுறுத்தியுள்ளார். அவரது எக்ஸ் பதிவில், #DravidianModel ஆட்சியின் போது, கோடை வெயிலைக் கருத்தில்கொண்டும் பெற்றோர்கள், கல்வியாளர்களின் கோரிக்கையை ஏற்றும் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது. இம்முறையை தற்போதைய அரசும் தொடர வேண்டும். வெயிலின் தாக்கம் குறையும் வரையில், வகுப்புகளைத் தொடங்கக் கூடாது என கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி