கனமழை எச்சரிக்கை காரணமாக, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.03) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாடு முழுவதும் மழைக்கு வாய்ப்புள்ளதால் மேலும் சில பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படலாம் என தெரிகிறது.