தமிழ்நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று (டிச.02) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விருதுநகர், நாகை, ராணிப்பேட்டை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், அந்த மாவட்டத்திலும் விடுமுறை அறிவிக்கப்பட வேண்டும் என மாணவர்களும் பெற்றோர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.