மகாராஷ்டிரா: தானேவில் உள்ள தனியார் பள்ளியில் மாணவிகளின் ஆடைகளை கழற்றி மாதவிடாய் சோதனை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாஹாபூரில் உள்ள RS தமனி பள்ளி கழிவறையில் ரத்தக்கறை இருப்பதை ஆசிரியர்கள் கண்டுள்ளனர். இதையடுத்து, ஆசிரியர்கள் 5-10 வகுப்பு வரை படிக்கும் மாணவிகளை கழிவறைக்கு வரவழைத்து, உள்ளாடைகளை கழற்றி பரிசோதித்துள்ளனர். இதையறிந்த பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நன்றி: ZEE