எஸ்ஐஆர் பணியால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் அலுவலர் தற்கொலை

குஜராத் மாநிலத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் ஈடுபட்டுவந்த வாக்குச்சாவடி அளவிலான அலுவலர் அரவிந்த் வதேர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பள்ளி ஆசிரியரான இவர், எஸ்ஐஆர் பணியால் ஏற்பட்ட மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வே தனது முடிவுக்கு காரணம் எனக் கடிதம் எழுதிவைத்துள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். தொடர்ந்து இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி