பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் டார்ச்சர்.. பள்ளி ஆசிரியர் கைது

தேனி மாவட்டம் ராஜதானி பகுதியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு பிளஸ்-2 படிக்கும் ஒரு மாணவிக்கு, ஆங்கில ஆசிரியர் ரஞ்சித்குமார் (38) தொடர்ந்து பாலியல் டார்ச்சர் கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த மாணவி, பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தார். தகவலறிந்து அங்கு சென்ற குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள், ரஞ்சித்குமாரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியான நிலையில், ரஞ்சித்குமார் போக்சோ சட்டட்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி