150 அடி ஆழ பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பள்ளிப்பேருந்து.. 2 மாணவர்கள் பலி

மகாராஷ்டிரா மாநிலம் நந்தூர்பாரில், 50 மாணவர்களை ஏற்றி சென்ற பள்ளி பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து 150 அடி ஆழ பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்து நடந்தவுடன் போலீசாரும், அப்பகுதி மக்களும் உடனடியாக விரைந்து, பேருந்தில் சிக்கித் தவித்த மாணவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். துரதிர்ஷ்டவசமாக, இதில் 2 மாணவர்களின் உயிர் பறிபோனதுடன், 15 பேர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி