ஈரானின் மினாப் பகுதியில் அமெரிக்கா-இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்த ஷஜரே தாய்பெஹ் பள்ளி, தற்போது போர் நினைவிடமாகவும் அருங்காட்சியகமாகவும் மாற்றப்பட்டுள்ளது. கடந்த பிப்.28-ம் தேதி நடந்த இத்தாக்குதலுக்கு பிறகு மூடப்பட்டிருந்த அப்பள்ளியில், உயிரிழந்த மாணவர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டு பொதுமக்கள் அமைதியான முறையில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும், இப்பள்ளி இனி மீண்டும் இயங்காது எனவும் மாகாண ஆளுநர் முகமது அஷூரி தாசியானி அறிவித்துள்ளார்.