பள்ளி மாணவர்களுக்கு ரூ.1,25,000 கல்வி உதவித்தொகை அளிக்கும் திட்டம்

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் கல்விக்காக ஆண்டுதோறும் ரூ.1,25,000 வரை வழங்கும் 'PM YASASVI' கல்வி உதவித்தொகை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மாணவர்கள் OBC, EBC அல்லது DNT பிரிவைச் சேர்ந்தவராகவும், குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கும் குறைவாகவும் இருக்க வேண்டும். தகுதியான மாணவர்கள் scholarships.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் இதற்கு விண்ணப்பித்துப் பயன்பெறலாம்.

தொடர்புடைய செய்தி