குஜராத்: அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான புதிய வீடியோ வெளியானது. சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட போயிங் 787 ரக பயணிகள் விமானம், சரியாக மதியம் 1.38 மணிக்கு புறப்பட்டது. அதன்பின் விமானத்தில் ஏற்பட்ட தொழிற்நுட்பக் கோளாறால் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து நொறுங்கி வெடித்துச் சிதறியுள்ளது.