பணியாளர் பற்றாக்குறையைப் போக்க வலியுறுத்தி எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதனால் மே 24 ஞாயிற்றுக்கிழமை மற்றும் மே 27 பக்ரீத் பண்டிகை விடுமுறை ஆகியவற்றை உள்ளடக்கி, மொத்தம் 4 நாட்கள் எஸ்பிஐ வங்கிகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடர் விடுமுறைக் காரணமாக வங்கிச் சேவைகள் பாதிக்கப்படும் என்பதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.