பிரபல யூடியூபரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பட தயாரிப்பாளரை மிரட்டியதாக பதியப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆதம்பாக்கத்தில் உள்ள சவுக்கு சங்கரின் வீட்டிற்கு சென்ற போலீசார் அவரை வீட்டில் வைத்தே கைது செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து சவுக்கு சங்கர் வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும், அவரது யூடியூப் சேனலில் பணிபுரியும் மாலதியும் கைது செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
நன்றி: SavukkuOfficial