"ஆயிரத்தில் ஒருவன்", "புதுப்பேட்டை" போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குநர் செல்வராகவன் தற்போது நடிப்பில் பிஸியாகிவிட்டார். அவரது நடிப்பில் பல்வேறு படங்கள் திரைக்கு வந்துள்ள நிலையில், மேலும் சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், தன் மனைவி வீட்டு சோபாவில் அமர்ந்து பாட்டு பாடுவதை செல்ஃபி வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு "என்னை காப்பாற்றுங்கள்" என கேப்ஷன் வைத்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.