சவுதி பேருந்து விபத்தில் உயிரிழந்த இந்தியர்கள் 45 பேரில் 18 பேர் ஹைதராபாத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தெலங்கானா மாநிலத்திலிருந்து சவுதி அரேபியாவின் மெக்காவிற்குப் புனிதப் பயணம் மேற்கொண்ட 42 பேர், மதீனா அருகே நிகழ்ந்த விபத்தில் நேற்று (நவ., 17) உயிரிழந்தனர். இதில் 9 சிறுவர்கள், முதியோர் என 3 தலைமுறையைச் சேர்ந்தவர்கள் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.