அகில் சத்யன் இயக்கத்தில் நிவின் பாலி நடித்த ‘சர்வம் மாயா’ திரைப்படம், கடந்த மாதம் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரூ.150 கோடிக்கும் மேல் வசூலித்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நிலையில், இப்படம் வருகிற 30-ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரியா ஷிபு, பிரீத்தி முகுந்தன், ஜனார்தனன், ரகுநாத் பலேரி, அஜு வர்கீஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.