முஷ்டாக் அலி டிராபி டி20 போட்டியில் சர்பராஸ் கான் 47 பந்துகளில் சதம் விளாசி அசத்தியுள்ளார். மும்பை அணிக்காக விளையாடும் சர்பராஸ் கான் அசாம் அணிக்கு எதிரான போட்டியில் 8 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்சர்களுடன் 47 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 100 ரன்கள் அடித்தார். சர்பராஸ் கானின் அபார சதத்தால், ரியான் பராக் தலைமையிலான அசாமை 99 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வீழ்த்தியது.
நன்றி: RanaAhmad