தேர்தலுக்கு பிறகு நடிகரும், பாஜக பிரமுகருமான சரத்குமாருக்கு தேசிய அளவில் கட்சிப் பதவி கொடுக்கப்படும் என்று அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், சரத்குமார் அருமையான தலைவர். அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. 5 மாநில தேர்தல் நடப்பதால் தற்போது யாருக்கும் தேசிய பதவி கொடுக்க முடியாது. தேர்தலுக்கு பிறகு சரத்குமாருக்கு தேசிய அளவில் பதவி கொடுக்கப்படும் என தெரிவித்தார்.