சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் வகையில், முன்னணி வீரர் சஞ்சு சாம்சன் அவுட், கேப்டன் ருதுராஜ், ஆயுஷ் மாத்ரே ஆகிய 3 பேரும் அவுட் ஆகினர். அஸ்ஸாமின் கவுகாத்தியில் இன்று (மார்ச் 30) ராஜஸ்தான் அணிக்கு எதிராக சிஎஸ்கே ஆடி வருகிறது. இதில் சஞ்சு சாம்சன் 7வது பந்தில் அட் ஆனார். வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். தொடர்ந்து கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 11வது பந்தில் அவுட் ஆனார். ஆயுஷ் மாத்ரே முதல் பந்திலேயே அவுட் ஆகியுள்ளார். முதல் 3 ஓவர்களில் 3 பேர் வெளியேறியுள்ளனர். இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனர்.